Tuesday, November 9, 2010

தமிழக மாவட்டங்கள்

அரியலூர்
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 
முக்கிய நகரங்கள் 
கங்கை கொண்ட சோழபுரம்
முதலாம் இராஜேந்திர சோழன் இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை  படை எடுத்து  வெற்றி பெற்றதன் நினைவாக  கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்நகரை நிர்மாணித்து, இங்கே அழியாத கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். பிறகு இராஜேந்திர சோழன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். அதன் பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராய்க் கொண்டிருந்தனர். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராய்ப் பணிபுரிந்த இடம் கங்கை கொண்ட சோழபுரமாகும்.
பெரம்பலூர்
மாவட்டத் தலை நகர் 
ஜெயங்கொண்ட சோழபுரம்
இப்பகுதியில் ஜைனமதம் பரவி இருந்ததிற்கான சான்றுகள் பல உள்ளன.
தொழில் :
டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை 
அரியலூர் சிமெண்டு தொழிற்சாலை

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆண்டு வந்ததிற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் பூங்குன்றத்திலும் காணப்படும் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் இராமநாதபுர மாவட்டத்துடன் பல்லவர்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

பல்லவர்களுக்குப் பிறகு சோழர்களின் ஆட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் இருந்து வந்தது. பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் வசம் இருந்தது. கி.பி. 1331 இல் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு முஸ்லீம் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1371 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி சரியத் தொடங்கி கி.பி. 1393 இல் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

கி.பி. 1605 இல் சேதுபதிகளின் ஆட்சி பொறுப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இருந்தது. சேதுபதிகளுள் கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாயிற்று.
திருநெல்வேலி,மதுரை மாவட்டங்களிலிருந்து 1901 இல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் 1985 மார்ச் 15 இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் உருவாக்கப்பட்டன.
இராமநாதபுரம் நகராட்சி 1959 இல் ஏற்பட்டது. இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகத்தில் அமைந்த ஊராதலால் இதை 'முகவை' என்று குறிப்பிடுவர்.




No comments:

Post a Comment