Tuesday, October 26, 2010

முக்கிய நிகழ்வுகள் பெஜிங் ஒலிம்பிக் 2008

204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் - 9 ஒலிம்பிக் போட்டியில் செக்குடியரசு வின் கேத்ரீனா எமான்ஸ் முதல் தங்க பதக்கம் வென்றார் .

ஆகஸ்ட் - 11 இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் .
ஆகஸ்ட் 20 - இந்தியாவை சேர்ந்த சுசில் குமார் மல்யுத்தம்போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார்.
ஆகஸ்ட் - இந்தியாவை சேர்ந்த விஜேந்தர் குமார் குத்துசண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார் .
ஆகஸ்ட் - அமெரிக்கா வின் மைக்கல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டியில் 8 தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்தார் .
ஆகஸ்ட் - ஜமைக்கா வின் உசைன் போல்ட் 100 , 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்தார் .
ஆகஸ்ட் - ரஷ்ய வீராங்கனை இசின்பயீவா, போல் வால்ட்பிரிவில் 5.05 புதிய உலக சாதனை படைத்தார் .
ஆகஸ்ட் - 23 அர்ஜென்டினா அணி கால்பந்து போட்டியில் இரண்டவது முறையாக தங்கம் வென்றது .
ஆகஸ்ட் - 23 பெண்கள் தொடர் ஓட்ட பந்தயத்தில் ரஷ்ய அணி தங்கம் வென்றது .
ஆகஸ்ட் - 21 பீச் வாலிபால் போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றது .
ஆகஸ்ட் - 21 ஆண்கள் 10 கிலோ மீட்டர் மராத்தான் நீச்சல் போட்டியில் நெதர்லாந்து வீரர் மார்டீன் வொண்டர் வெஸ்டன் தங்கம் வென்றார் . இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் .
அடுத்த ஒலிம்பிக் போட்டி லண்டன் இல் 2012 இல் நடைபெறும் .

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

 புலிகளை பாதுகாக்க   இந்திய அரசால் 1972 ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புராஜெக்ட் டைகர். இந்திய வனவிலங்குகள் வாரியம் (IBW )  இத் திட்டத்தினை வடிவமைத்தது. புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதும், அவைகளின் பாரம்பரிய இயற்கை வாழ்விடங்களை பாதுகாத்து இந்திய மக்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக அர்பணித்தலுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உலக இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது . அதற்கான நடவடிக்கையாக,  இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல்  வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது.  1972 ல் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது. புலிகள்  பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க  1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது

மத்திய அரசு 1972 (NTCA )ஆம் ஆண்டின் தேசிய வவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் என சட்ட பூர்வமாக்கியது.

சுதந்திர போராட்ட வீரர்கள்

அன்னி பெசன்ட் அம்மையார்.
1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.1866ல் பிராங்க்பெசண்ட் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.சமூக சேவையில் ஆர்வம் கொண்டு 1875 நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிரம்ம ஞான சபையில் இணைந்தார். மத நல்லிணக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் தலைவராக 1891ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இதன் பின்னர் மத நல்லிணக்கத்தை பரப்பும் நோக்கில் இந்தியா வர விரும்பினார் அன்னி பெசன்ட். இதற்காக அப்போதைய ஆங்கில அரசுடன் கடுமையாக போராடி அனுமதி பெற்று, 1893ம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்தியா வந்திறங்கினார். 1913இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். 1917இல்  மாதர் சங்கம் அமைத்தார் .பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார் அன்னி பெசன்ட்.பெண் கல்வி‌க்காக சிறப்புக் கவனம் செலுத்தினார். இதற்காக 1898இல் காசியில் மத்திய இந்துக் கல்லூரி, 1904இல் மத்திய உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றை அமைத்தார். "இந்தியாவே விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம். 1904இல் 'பொதுநலம்' என்ற வார இதழையும், 'புது இந்தியா' என்ற நாளிதழையும் தொடங்கினார். சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக இப்படி அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 18. இதுதவிர, ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362   அன்னி பெசன்ட் அம்மையார் 1933 செப்டம்பர் 20ஆம் தேதி தனது 86ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்: 
பா‌ஞ்சால‌‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளை‌ய‌த்தை ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்த ‌வீர‌பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்த மறுத்து வ‌ந்தா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வரி வசூ‌ல் கொ‌ள்கையே ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம், க‌ட்டபொ‌ம்மனு‌க்கு‌ம் இடையே ‌விரோத‌ம் ஏ‌ற்பட மு‌க்‌கிய காரணமாக அமை‌ந்தது. ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் வ‌ரியை உடனடியாக செலு‌த்துமாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு பல கடித‌ங்க‌ள் எழு‌தினா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அவ‌ற்றை ‌நிராக‌ரி‌த்தா‌ர். இதனா‌ல் கோபமு‌ற்ற ‌திருநெ‌ல்வே‌லி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கா‌லி‌ன் ஜா‌க்ச‌ன் த‌ம்மை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்கு‌மாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு க‌ட்டளை‌யி‌ட்டா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ர் ஜா‌க்ச‌ன் கட்டபொம்மனஅவமானப்படுத்நினைத்தவேண்டுமென்றஇடங்களுக்கஅலைக்கழித்தார். இறு‌தியாக  ‌ ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ராமநாதபுர‌ம் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ஜா‌க்சனை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌ங்கு க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வ‌ரி வசூ‌லி‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌க்ச‌னிட‌ம் கடுமையாக வா‌தி‌ட்டா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ஜா‌க்ச‌ன் க‌ட்டபொ‌ம்மனை சூ‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் கைது செ‌ய்ய ‌நினை‌த்தா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அ‌ங்‌கிரு‌ந்து த‌ந்‌திரமாக த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்றா‌ர்.இதையடு‌த்து க‌ட்டபொ‌ம்ம‌ன் மருது சகோதர‌ர்களுட‌ன் இணை‌ந்து ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராகப் போர் தி‌ட்ட‌ம் ‌‌‌‌தீ‌ட்டினா‌ர். க‌ட்டபொ‌ம்ம‌ன் ‌சிவ‌கி‌ரி பாளைய‌த்தை தனது கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்காக ‌சிவ‌கி‌ரி ‌மீது படையெடு‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ஆனா‌ல் ‌சிவ‌கி‌ரி பாளைய‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்து‌ம் பாளையமாக இரு‌ந்ததா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் க‌ட்டபொ‌ம்ம‌னி‌ன் படையெடு‌ப்பை த‌ங்களது அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திரான ஒரு சவாலாக கரு‌தி‌ த‌ங்களது படைகளை ‌திருநெ‌ல்வே‌லி ‌மீது படையெடு‌க்குமாறு கட்டளை‌யி‌ட்டன‌ர். மேஜ‌ர் பான‌‌ன் தலைமை‌யிலான ஆ‌ங்‌கிலேய படைக‌ள் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி கோ‌ட்டையை மு‌ற்றுகை‌யி‌ட்டது. பான‌ர்மேன் க‌ட்டபொ‌ம்மனை சரணடையுமாறு கோ‌ரினா‌‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அதனை ஏ‌ற்க மறு‌த்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்று பு‌து‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள கள‌ப்பூ‌ர் கா‌ட்டி‌ல் தலைமறைவாக இரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்டை அரச‌ர் விஜய ரகுநாத தொ‌ண்டைமா‌ன் க‌ட்டபொ‌ம்மனை கைது செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர். இ‌ப்படியாக ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர். 


வ. உ. சிதம்பரம்பிள்ளை
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டிதுரை தேவர்  சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.  ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து,                   இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.எனவே  செக்கிழுத்த செம்மல்  என்று அழைக்கப்பட்டார் . சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன
 கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள   கோதாலுக்கில் பிறந்தார்,  1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே இருந்தார் . 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். 1895 இல் கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார்.1907 இல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் கோபால கிருஷ்ண கோகலே இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார். 1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார்1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்தார் 
தாதாபாய் நௌரோஜி 
(Poverty and Un-British Rule in India) என்ற நூலினை எழுதினர் . 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20 என்று கக்கிட்டார் . இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். காந்தி  தாதாபாய் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். 
லாலா லஜபத் ராய்
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் துதி கே என்னும் ஊரில் பிறந்தார்.1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.  திலகர், பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபத் ராய் ஆகியோரை லால்-பால்-பால் என அழைப்பர். 1927 இல் சைமன் குழு இந்தியாவிற்கு வந்த போது நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு இறந்தார் 
பகத் சிங் 
  செப்டம்பர் 27, 1907 இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயல்புரில் பிறந்தார்.இவர்  இந்தியாவின் முதலாவதுமாக்ஸ்யாவதி என சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு லாலா லஜபத் ராய் இறப்புக்குக் காரணமாயிருந்த  உதம் சிங் என்ற காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.


Thursday, October 21, 2010

தமிழக ஆறுகள்

காவிரி 
இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்தில்   குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. தமிழ் நாட்டில் தர்மபுரி. சேலம். ஈரோடு, நாமக்கல். கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வழியாக பாய்ந்து  பூம்புகார்  என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது

Thursday, October 14, 2010

பாரத ரத்னா விருது

பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது

விருது பெற்றோர் பட்டியல்
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்
15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய்  1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம்  1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர்  1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென்  1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர்  2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி  2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா 
இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.  

Thursday, October 7, 2010

இந்தியாவில் அதிக பரப்பளவில் விளையும் பயிர் நெல்
அக்பர் குஜராத்தை வென்றதின் நினைவாக கட்டப்பட்ட நுழைவாயில்  புலந்தர்வாஜா
கட்டிடக் கலையின் இளவரசர்  ஷாஜஹான்
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் பாரசீக மன்னன்  முதலாம் டேரியஸ்
விஜயநகரப் பேரரசின் தலைநகரம்  ஹம்பி
கலிங்கத்தின் தற்போதைய பெயர் ஒரிசா
டெல்லியின் பழைய பெயர்   இந்திரபிரஸ்தம்
தமிழகத்தின் இயற்கை பூமி தேனி மாவட்டம் 
பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர்  வினோபாவே  1951 
இந்தியாவில் வரதட்சணை தடை  சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1961
இந்திய வீராங்கனை சுமன் பாலா ஹாக்கி விளையாட்டோடு தொடர்புடையவர்
ஆதி சங்கரரின் தத்துவம் - அத்வைதம்
சூடான கிரகம் - புதன்
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகம் - வியாழன்
சூரிய மண்டலத்தின் சிறிய கிரகம் - புளுட்டோ 2006;y  

பொதுத் தமிழ்

 பெயர்ச்சொல் வகை அறிதல் :
கருமை ———————- பண்புப்பெயர்
வட்டம் ———————- பண்புப்பெயர்
இனிமை ——————- பண்புப்பெயர்

பொன்னன் —————- பண்புப்பெயர்
செவ்வகம் – ————–
பண்புப்பெயர்

ஆடல் -—————— தொழிற்பெயர்
பாடல் ——————-
தொழிற்பெயர்
தேடுதல் —————-
தொழிற்பெயர்
கொடுத்தல் ————
தொழிற்பெயர்
பாடுதல் —————– தொழிற்பெயர்

கை —————————– சினைப்பெயர்
கிளை முறிந்தது ———–
சினைப்பெயர்
கால் ————————— சினைப்பெயர் 

பங்குனி ——————- காலப்பெயர்
சித்திரை —————— காலப்பெயர்
நாள்
———————— காலப்பெயர் 

 மறைமலைநகர் ——- இடப்பெயர்
தஞ்சாவூர் ————— இடப்பெயர்
கோவை —————– இடப்பெயர்
சென்னை ————— இடப்பெயர்
  

அறுபத்து நான்கு கலைகள்

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

ரிசர்வ் வங்கி

ஆண்டு வெளியீடுகள்
ஆண்டறிக்கைகள்
ஆகஸ்ட் இறுதியில் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, அதன் நிதிநிலை அறிக்கை பற்றிய விபரங்கள் அதன் மைய இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு அளிக்கப்படுகிறது. இந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிய கணக்கீட்டையும், எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியது.
ஆகஸ்டில் வெளியிடப்படும் இந்த அறிக்கை சட்டரீதியானது, ரிசர்வ் வங்கியின் நிதியாண்டான (ஜூலை – ஜுன்) ஆண்டுக்குரியது.
இந்திய வங்கியியல் நடைமுறையும் வளர்ச்சியும்
இதுவும் சட்டரீதியான வெளியீடு. ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. முந்தைய ஆண்டில் நிதித்துறைக் கொள்கைகளின் மறுஆய்வுச் செயல்பாடுகளையும் இவ்வறிக்கை பறைசாற்றுகிறது. ஏப்ரல் முதல் மார்ச் முடிய உள்ள ஆண்டிற்கான அறிக்கை நவம்பர் / டிசம்பரில் வெளியிடப்படுகிறது.
பணநாணய நிதி அறிக்கை
மைய வங்கியின் பணியாளர்களால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை இது. 1998-99 தொடங்கி ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு, அது சம்பந்தமான அனைத்துப் பொருளாதார விஷயங்களையும் பற்றி விரிவான மதிப்பீடு இருக்கும். எக்கொள்கை பற்றி அறிக்கையில் முக்கியத்துவம் கொள்ளப்பட்டிருக்கிறதோ, அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சவால்கள் என்று பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இது டிசம்பரில் வெளியிடப்படுவதால், இடைக்காலப் பொருளாதார ஆய்வினை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கின்றது.
இந்தியப்பொருளாதார புள்ளி விபரப்புத்தகம்
இந்தியப்பொருளாதாரம் பற்றிய அனைத்து புள்ளி விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உதவும் வகையில் இவ்வெளியீடு அமைகிறது. ஆண்டு, காலாண்டு, மாத, இருவார, தின கால அளவில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளிவிபரக் கொள்கலனாக இது விளங்குகிறது. தேசிய வருமானம், உற்பத்தி, பணம், வங்கியியல், நிதிச்சந்தை, பொதுநிதி, பன்னாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி நிலுவை சம்பந்தமான புள்ளி விபரங்களைப் புத்தகமாகவும், கணிணித்தட்டாகவும் தருகிறது.
இந்தியப் பொருளாதாரத்திற்கான புள்ளிவிபர அடிப்படை
இந்தியப்பொருளாதாரம் பற்றிய புள்ளி விபரங்களின் அடிப்படையாக, கொள்கலனாக ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் வெளியிடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இத்தளத்தை அணுகவும் தேவைப்படும் விபரங்களை எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது.
மாநில நிதிகள்
மாநில அரசுகளின் நிதி மதிப்பீடுகளை அவைகளின் நிதிநிலை அறிக்கை மூலம் ஆராய்ந்து ஒருங்கிணைந்த ஆய்வினை அளிக்கிறது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை அளிக்க இது உதவுகிறது.
இந்திய வங்கிகள் சம்பந்தமான புள்ளிவிபரப் பட்டியல்கள்
இது வணிக வங்கிகளைப்பற்றிய புள்ளி விபரங்கள் அடங்கிய ஆண்டு வெளியீடு. ஒவ்வொரு வங்கி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்பாடு பற்றிய விபரங்கள் அடங்கும். வங்கிக்குழு வாரியாகவும், மாநில வாரியாகவும் இந்த விபரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அடிப்படைப் புள்ளிவிபர அறிக்கைகள்
இதுவும் ஒரு ஆண்டு வெளியீடு. பட்டியலிடப்பட்ட வங்கி வாரியாக, அலுவலகங்கள், அலுவலர்கள, வைப்புகள், கடன்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுகின்றன. வட்டார, மாநில, மாவட்ட ரீதியாக புள்ளி விபரங்கள் அளிக்கப்படுகினறன.
காலாண்டு வெளியீடுகள்
மொத்தப் பொருளாதார பண நிகழ்வுகள்
 ஆளுநர் அளிக்கும் ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னரும், இடைக்கால / காலாண்டு மறுஆய்வுக்கு ஒரு நாள் முன்னரும் இது வெளியிடப்படுகிறது. தேவையான விபரங்களையும், தொழில் நுட்ப அணுகுமுறைகளையும் எடுத்துரைக்கிறது. 2004 வரை ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு முன்னரும் 2005லிருந்து ஆண்டுக்கொள்கை அறிவிப்பு, இடைக்கால மறு ஆய்வு, காலாண்டு மறு ஆய்வுக்கு முன்னரும் வெளியிடப்படுகிறது.
மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் முடிய உள்ள காலாண்டுகளுக்கு இது வெளியிடப்படுகிறது.
மாதாந்திர வெளியீடு 
ரிசர்வ் வங்கி அறிக்கை
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காகச் சேர்க்கப்படும் புள்ளி விபரங்களைத் தொகுத்தாராய்ந்து இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. ஆளுநர், துணை ஆளுநர், நிர்வாக இயக்குநர்களின பேச்சினை / சொற்பொழிவை வெளியிடுகிறது. இதன் மூலம் மையவங்கியின் கொள்கைகளை உணர்ந்து கொள்ளலாம். முக்கியமான பத்திரிக்கை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நிதி வங்கி பற்றிய கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆண்டுக் கொள்கை அறிவிப்பு, இந்திய வங்கிகளின் நடைமுறை வளர்ச்சி இவைபற்றி சிறப்புக் கட்டுரைகள் அவ்வப்போது பிரசுரமாகின்றன.
பணகடன் தகவல்கள் மறுஆய்வு
நான்குபக்க மாத வெளியீடு வங்கிகளுக்கு பெரிதும் உதவும். மையவங்கியின் முக்கியமான சுற்றறிக்கைகளை பிரசுரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படுகிறது.
வாரவெளியீடு
புள்ளி விபர துணை வெளியீடு
ரிசர்வ் வங்கியின் வாராந்திர நிதி நிலை அறிக்கை இது. நிதி, பொருள், தங்கச்சந்தைகளின் முக்கிய நிகழ்வுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 12 மணிக்கு இது வெளியிடப்படுகிறது.
பத்திரிகை வெளியீடு
பணச்சந்தை நிலவரங்கள் பற்றியும், நான்கு பெரிய குறிக்கப்பட்ட அந்நிய நாணயங்களுக்கான வீதங்கள் பற்றியும் (டாலர், யூரோ, பவுன்ட், ஸ்டர்லிங், யென்), முக்கிய வங்கியியல் ஒழுங்கு முறைகள் பற்றியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் பற்றியும் தினமும் பத்திரிகைச்செய்தி வெளியிடுகிறது.
நான்கு மாதத்துக்கு ஒரு முறை இது வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு. கட்டுரை ஆசிரியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளே ஆகும். 1999லிருந்து ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.
வளர்ச்சி ஆராய்ச்சி குழுமக்கல்வி
ரிசர்வ் வங்கிப் பணியாளர்களுடன் கலந்து வெளி வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சிகள் வெளியிடப்படுகின்றன. உன்னத ஆராய்ச்சிகளில் வெளி வல்லுநர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பாக இக்குழுமம் உதவுகிறது.
அறிக்கை
ரிசர்வ் வங்கி தான் நியமித்த குழுக்களின் அறிக்கைகள், கருத்துக்கேட்பு இவைகளை வெளியிடுகிறது.