Wednesday, September 15, 2010

பாண்டியர்கள்

குமரி கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் முதல் சங்கத்தில்  அரங்கேற்றப்பட்டது எனவும் கடை சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாளில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.அசோகரின் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன. பாண்டியர்கள் வேப்பம்பூ  மாலை அணிவர்இவர்களது கொடி மீன் கொடி  தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்ட னர்  
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்  அடுத்த நிலையில்அரசியல்அதிகாரிகள்,படைத்தலைவர்கள்இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டியர்காலத்தில்வரியைஇறைஎன்றழைத்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லை கல் நட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.  சமண மற்றும் புத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது. பிரமணர்களுக்கு  வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு அளிக்கப்பட்ட கொடை முற்றூட்டு என்றும் ,சோதிடர்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகணிமுற்றூட்டு எனவும்  அழைக்கப்பட்டன.
துலாம்,பலம், குறுணி, கலம் என்பவை அளவைகள் ஆகும்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில்  தங்கம் மற்றும் செம்பால்  செய்யபட்ட  நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சித்தன்ன  வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.

பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடியும் நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை :-

  • சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
  • ஏரிசவாரியம் - நீர் நிலை, பாசனம்  கண்காணிப்பது.
  • தோட்ட வாரியம் -   நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
  • பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
  • பஞ்சவாரியம் - வரி வசூலிப்பது
அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.வணிகர்கள் கூடமாக செல்வது வணிக சாத்து எனப்பட்டது  வணிகர்களில் சிறந்தவர் எட்டி எனப்பட்டனர்
பாண்டியர் காலத்தில்   குட ஓலை முறை இருந்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள மானூர்  கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறிப்பிடுகிறது  
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது. நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன்   போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை
கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள்  மற்றும் பணம்  சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின்

அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம், போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.













































































No comments:

Post a Comment