Wednesday, September 15, 2010

சங்க கால நூல்கள்

அகநானூறு : 
அகத்திணைக்குரிய கருப்பொருள்களாக தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள்,விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலிய பதினான்கும் உயர்திணைக்குரியதாக வைத்து இயற்றப்பட்டதே அகநானூறு. சங்க இலக்கியம் எட்டுத் தொகைகளில் ஏழாவதாக வைத்துப் போற்றப்படுவது அகநானூறு. இதில் உள்ள செய்யுள்கள் அகப்பொருட்களை அடிப்படையாய் வைத்து பெருந்தேவனார் முதலிய பெரும் புலவோர் குழுமம் இதனை படைத்தது.
அகநானூறு நிரை, மணி, கோவை என மூன்று பகுதியாகத் தொகுக்கப்பட்டது. நிரையை விளக்க இதன் அகப்பொருள் வலிமை வாய்ந்த ஒரு யானைக்கு நிகராம். மணி மதிப்பில் அளவிட பவளம் எனவும் முத்துக்களால் கோர்க்கப்பட்ட மாலையை ஒத்த நித்திலக் கோவை எனவும் வழங்கப்படும். இவ்வாறு இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மன், இவர் தொகுக்க உதவிய அரசன் உக்கிரப் பெருவழுதி அகநானூற்றிக்கு நெடுந்தொகை என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு.
புறநானூறு
புறத்திணையான அரசனின் போர்க்குணம், வெற்றி, படை, நாடு, எல்லை, வீரம், பொருள் உதவி, செல்வச் செழிப்பு, எதிரிகள், எதிரியின் திறன் முதலியவற்றைப் பற்றி பாடப்பட்டவை. நானூறு பாடல்களைக் கொண்ட இதனை அகநானூறு தலைமை ஏற்றுப்பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே இதனையும் தலைமை ஏற்றுள்ளார். இறை வாழ்த்தைத் தொடங்கி வைத்த பெருந்தேவனாரைத் தொடர்ந்து புலவர் பெருமக்களின் குழுவினர் பாடிய செய்யுள் தொகுப்பே புறநானூறு.
பாடிய புலவர் பெருமக்கள் :
அரிசில் கிழார்
ஆலத்தூர் கிழார்
ஆவூர் மூலங்கிழார்
இடைக்காடனார்
இரும்பிடர்த்தலையார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊன்பொதி பசுங்குடையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கிழார்
ஒருசிறைப் பெரியனார்
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
ஒரேருழவர்
ஒளவையார்
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கணியன் பூங்குன்றன்
கபிலர்
கருங்குழலாதனார்
கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்
கல்லாடனார்
கழாத்தலையார்
கள்ளில் ஆத்திரையனார்
காரி கிழார்
காவற்பெண்டு
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
குடபுலவியனார்
குறமகள் இளவெயினியார்
குறுங்கோழியூர் கிழார்
கோவூர் கிழார்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
சாத்தந்தையார்
சேரமான் கணைக்காலிரும்பொறை
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நல்லுருத்திரன்
சோழன் நலங்கிள்ளி
தாமற் பல்கண்ணனார்
துறையூர் ஓடைகிழார்
தொண்டைமான் இளந்திரையன்
நரிவெரூஉத்தலையார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தனார்
பக்குடுக்கை நன்கணியார்
பரணர்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் அறிவுடை நம்பி
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரி மகளிர்
பிசிராந்தையார்
புறத்திணை நன்னாகனார்
பெருங்குன்றூர் கிழார்
பெருங்கோழி நாய்கன் மகள்நக்கண்ணையார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச் சாத்தனார்
பெரும்பதுமனார்
பேய்மகள் இளவெயினியார்
பொய்கையார்
பொருந்திலிளங்கீரனார்
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரை மருதன் இளநாகனார்
மாங்குடி கிழார்
மாறோக்கத்து நப்பசலையார்
முரஞ்சியூர் முடிநாகனார்
மோசிகீரனார்
வடநெடுந்தத்தனார்
வடமவண்ணக்கன் தாமோகதரனார்
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்
வன்பரணர்
வெண்ணிக் குயத்தியர்
வெள்ளைக்குடி நாகனார்
பரிபாடல்:
சங்கப் புலவர்களால் ஆக்கப்பட்டது. எட்டுத்தொகை வரிசையில் ஐந்தாம் நூலாக இதனைக் கூறுவர். திருமால், குமரன், கடல், வைகை, மதுரை முதலியவற்றை முன்னிலைப்படுத்தி பாடப்பட்ட எழுபது பாடல்களின் தொகுப்பாகும்.
எட்டுத்தொகை நூல்கள்:

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:


"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை."


பத்துப்பாட்டு நூல்கள்:

1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணற்றுப்படை
5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்)
6. மதுரைக் காஞ்சி
7. முல்லைப்பாட்டு
8. குறிஞ்சிப் பாட்டு
9. நெடுநல்வாடை
10. பட்டினப்பாலை

பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
 
பதிற்றுப் பத்து :
எட்டுத்தொகை நூலில் நான்காவதாக எண்ணத்தக்கது. பத்து பேரடங்கிய சங்கப் புலவர்களால் இது இயற்றப்பட்டது. பத்து புலவோரும் பத்து, பத்து, பாக்களை இதில் இயற்றியுள்ளனர். இதில் முதலாம் பாடலும் பத்தாம் பாடலும் கிடைக்கவில்லை. இரண்டு முதல் ஒன்பது வரையே கிடைக்கப் பெற்றது. சேர அரசர்களின் வாழ்வையும், வளத்தையும் கூறும் நூல் இது.
ஐங்குறுநூறு :
அகத்திணைப் பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள நூல். ஐந்து பகுதிகளான இந்நூலை ஓரம் போகியார், அம்மூவனார், கபிலர், ஒதலாந்தையார், பேயனார் முதலான புலவர்கள் ஒவ்வொருவரும் நூறு, நூறு அகவல்களாகப் பாடியுள்ளனர். இதன் தொடக்கமான இறை வாழ்த்துப் பாடலை பெருந்தேவனார் படைத்துள்ளார். இப்பாடல் திரட்டை புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுத்தார்.
கலித்தொகை :
எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகக் கூறப்படுவது. கலித்தொகை நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இதில் புலவர் குழுவே பாடியுள்ளது. கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
குறுந்தொகை :
எட்டுத்தொகை வரிசையில் இரண்டாம் நூலிது. சங்கப் புலவர்கள் மூவர் இதனைப் படைத்துள்ளனர். இந் நூலுக்கு பேராசிரியரும், நச்சினார்க்கினியனாரும் உரை எழுதியுள்ளனர்.
நற்றிணை :
ஐந்து திணைகளிலும் நானூறு பாடல்களைக் கொண்ட நூல். பெருந் தேவனார் தொடங்கி ஆலங்குடிவங்கனார் இறுதியாகக் கொண்டு புலவோர் குழுவால் பாடப்பட்ட நூல் இதை பன்னாடு தந்த பாண்டியன் பெருவழுதி தொகுத்தார்                                                                                              

No comments:

Post a Comment