Thursday, August 12, 2010

நிகழ்வுகள் 2009

ஜன. 18
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர், நான்காவது நாளில் தமிழக  தலைவர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை அவர் கைவிட்டார்.

ஜன. 29 
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார்.

பிப். 19 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது 

மார்ச் 9 
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
ஏப். 27 
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மே 13 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 
மே 28 
மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 29
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

ஜூன் 25 
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

ஜூலை 23
இந்தியாவில் முதல் முறையாக ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆக. 22 
தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 
ஆக. 26
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
.  
அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 10
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது.

நவ. 8
நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது. இதில் மண்சரிவு மற்றும் விபத்துகளில் 14 பேர்  பலியானார்கள். ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் 29 பேர் பலியானார்கள்.
நவ. 12
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
டிச. 3 
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானதில் 9 குழந்தைகள்  பலியாகினர். இந்த விபத்தின் போது 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தார்.
டிச. 23
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

No comments:

Post a Comment