Friday, August 13, 2010

இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்று அரசு தெரிவித்துள்ளது
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது.
தமிழகத்தில்  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன. கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment