Thursday, August 12, 2010

இந்தியா நிகழ்வுகள் 2009

ஜன. 8
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜன. 27 
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தனது 98 ஆவது வயதில் காலமானார்.
ஜன. 27
இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார்.

மார்ச் 5 
நாட்டின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, நவீன் சாவ்லா பதவி  ஏற்றார்

மார்ச் 31
1993 மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்ற இ‌ந்‌தி நடிக‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்‌துக்கு, ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடுவதற்கு அனும‌திய‌ளி‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

மே 17
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 261 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. 
மே 22 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் 18 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்றது, தொடர்ந்து இரண்டாவது முறையாகும். 

ஜூன் 3 
மக்களவை சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் மக்களவை  சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

ஜூன் 12 
எச்1என்1 வைரஸ் கிருமியால் உண்டாகும் பன்றி காய்ச்சல் நோய், இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெகுவாக பரவியது. இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஐ தொட்டதாக டிசம்பர் 26-ல் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 
ஜூன் 30 
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் விசாரணை கமிஷன் அறிக்கை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 26 
ரூ.14 ஆயிரத்து 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை, பிரதமர்  மன்மோகன் சிங் இயக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது. 
ஆக. 4 
நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆக. 9 
பெங்களூருவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல் அமைச்சர் கருணாதி திறந்து வைத்தார். அதன்  தொடர்ச்சியாக, சென்னையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கன்னட கவிஞர் ச‌ர்வ‌க்ஞ‌ர் ‌சிலையை, க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர்  எடியூர‌ப்பா திற‌ந்து வை‌‌த்தா‌ர்.

செப். 3 
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
செப். 7
2009-10 ஆம் கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். 
வித்தது.  
செப். 30
தமிழக-கேரள எல்லையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம்  68 பேர் இறந்தது தெரியவந்தது.

அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அக். 22
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

நவ. 2
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மீது ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்தது.

நவ. 23 
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியானதால்  மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நவ. 24
லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நவ. 25 
இந்திய விமானப்படையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் அதிநவீன 'சுகோய்-30' ரக போர்  விமானத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தார்.

நவ. 30 
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தங்களது கேள்விகளை கேட்க வேண்டிய உறுப்பினர்கள் 28 பேர் அவையில்  இல்லாததால், மக்களவை கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைத்த சபாநாயகர் மீராகுமார், "கடந்த 20  ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை," என்றார்.

டிச. 9
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ்
டிச. 19
பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தேசிய தலைவராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பதவியேற்றுக் கொண்டார்.



No comments:

Post a Comment