Friday, August 13, 2010

இந்தியா 2009

ஜனவரி

1 - கபில்தேவ், கவாஸ்கர், பிஷன் சிங் பேடி ஆகியோர் ஐசிசியின் சர்வதேச புகழ் பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றனர்.
10 - பண மோசடியை ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன
தலைவர் ராமலிங்கராஜு கைது செய்யப்பட்டார்.
15 - பிரபல இயக்குநர் தபன்சின்ஹா மரணமடைந்தார்.
19 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
27 - முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணமடைந்தார்.


மார்ச்

2 - நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக
தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

23 - டாடா நிறுவனத்தின் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏப்ரல்

10- தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சம்பத் நியமிக்கப்பட்டார்.

21 - தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்றார்.

28 - போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை சிபிஐ நீக்கியது

மே


16 - நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 256 இடங்களையும், பாஜக கூட்டணி 161 இடங்களையும், 3வது அணி 68 இடங்களையும், 4வது அணி 28 இடங்களையும் பெற்றன.

19 -  பிரதமராக மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 - மேற்கு வங்கம், வங்கதேசம், சிக்கிம், ஒரிசாவை அய்லா புயல் தாக்கியது.
31 - பிரபல எழுத்தாளர், கவிஞர் கமலாதாஸ் மரணமடைந்தார்.

ஜூன்

3- லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றார்.
8 - லோக்சபா துணை சபாநாகராக பாஜகவின் கரியமுண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 - இந்தியா முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து
அரசு பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
28 - மலையாள இயக்குநர் லோஹிததாஸ் மரணமடைந்தார்.
30- பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிபதி  லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்தார்.
மும்பையில், பிரமாண்ட கடல் பாலத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

ஜூலை

21 - பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகி கங்குபாய் ஹங்கல் மரணமடைந்தார்.
26 - இந்தியாவின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹாந்த்தை பிரதமர்
மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
29 - மலையாள நடிகர் ராஜன் பி தேவ் மரணமடைந்தார்.

ஆகஸ்ட் 
9 - பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா முன்னிலையில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
19 - ஜின்னாவைப் புகழ்ந்து நூல் எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து
நீக்கப்பட்டார்.
29 - சந்திரயான் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர்

2 - ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
24- நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் விண்கலத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க செயற்கைக் கோள் கண்டுபிடித்தது.

அக்டோபர்

7 - தமிழகத்தில் பிறந்தவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
13 - மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.
22 - மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப்
பிடித்தது. ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இஸ்ரோவின் புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

நவம்பர்

2 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட்டனர்.
7 - மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் 2வது முறையாக பதவியேற்றார்.
25 - சுகோய் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
30 - பல ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா கைது.

டிசம்பர்

2 - நதி நீர் இணைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு.
6 - இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று, டெஸ்ட் தர வரிசையில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது இந்திய கிரிக்கெட் அணி.
18 - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகினார்.
19 - பாஜக தலைவராக நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அக்கட்சியின் சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர 82 தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
27 - ஆந்திர மாநில ஆளுநராக சட்டீஸ்கர் ஆளுநர் நரசிம்மன் கூடுதல்
பொறுப்பேற்றார்.
30 -கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.
   - ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.

No comments:

Post a Comment