Tuesday, August 24, 2010

நடப்பு நிகழ்வுகள்

முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.டி. தாமஸ் மற்றும் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் அத்வால் கோப்பை வென்றார். இதன்மூலம் அமெரிக்காவில் நடந்த கோல்ப் தொடரில் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைத்தார்
சர்வதேச நிதியங்களிலிருந்து கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மெக்சிகோ  இரண்டாம் இடமும் தென்னாப்ரிக்கா மூன்றாம்   இடமும் வகிக்கிறது
எண்ணெயை உண்ணும் புதிய வகை நுண்ணுயிர் ஒன்றை மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில்  லாரன்ஸ் பேர்க்லி தேசிய ஆய்வுகூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய நுண்ணுயிர்கள் ஓசியானோஸ்பிரிலாலெஸ் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்
முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட்  14 அன்று  சிங்கப்பூரில் உள்ள  மெரீனா பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தளத்தில்  இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
இப்போட்டிகள் 14ம் தேதி தொடங்கி இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளில் 14 முதல் 18 வரை வயதுள்ள 3,600 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வர்
 உலகின் மிகவும் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தீவு ஜாவா தீவு. இது இந்தோனீசியாவின் 5வது  மிக பெரிய தீவு
இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள்  பணிகளை  முடிக்காவிட்டால் பிளாக்பெர்ரிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாக்பெர்ரி செல்போனில் பரிமாறிக்கொள்ளப்படும் மெசேஜ்கள் ரகசிய குறியீடுகளாக மாற்றப்படுகிறது. இது இந்திய உளவு அமைப்புகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.ரகசிய குறியீடுகளை புரிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என பிளாக்பெரிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள் 2 மாதத்தில் அமைக்கப்படும் என்று பிளாக்பெர்ரி உறுதிமொழி கூறியது.
இந்தியாவின்  தேசிய பாரம்பரிய விலங்காக யானை விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

 



No comments:

Post a Comment